Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோடநாட்டில் ஆய்வு செய்ய அனுமதி - நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கோத்தகிரி ஊராட்சிமன்ற தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

04:52 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.  இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது கூடுதல் கட்டுமானப்  பணிகள் மேற்கொண்டிருந்தால் ஆய்வு செய்தால் தானே  தெரிந்து கொள்ள முடியும்  எனஅரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக கடந்த  2021ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே மீண்டும் கொடநாட்டில் ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
kodanaduKodanadu estateMadras Higher Court
Advertisement
Next Article