Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
01:34 PM Mar 03, 2025 IST | Web Editor
Advertisement

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்குக் கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகியுள்ளனர்.

Advertisement

இதையடுத்து பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும், படத்தின் அனைத்து உரிமைகளை வழங்க வேண்டுமெனவும், 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால் கடன் தொகையைத் திருப்பி தராததை அடுத்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடி செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல், "இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. எனினும், இதுவரை பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

Tags :
caseChennaiconfiscationcourtorderHouseMadras High CourtOrdersSivaji Ganesan
Advertisement
Next Article