Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு - ரூ.1 கோடி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

08:39 PM Nov 10, 2023 IST | Web Editor
Advertisement

கேரளாவை சேர்ந்த சர்மிளா அவதூறு கருத்துக்களை பரப்பியதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சர்மிளா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\

Advertisement

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த சர்மிளா புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய ரூ. 14 கோடியில் ரூ. 3 கோடி மட்டும் திருப்பி அளித்து விட்டு, மீதமுள்ள பணத்தை தராமல் மிரட்டுவதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சர்மிளா அளித்த புகார் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகளாக வெளியாகின.

இதனைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கர்,  தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக மான நஷ்ட ஈடு கோரி சர்மிளாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், “அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது.

இதையும் படியுங்கள்: “காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

சமூக வலைதளங்களில் விஜயபாஸ்கர் குறித்த சர்மிளாவின் பதிவுகளை நீக்க வேண்டும்.  இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையும் நீக்க வேண்டும். மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு கேரளாவை சேர்ந்த சர்மிளா ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Tags :
ADMKChennaiDefamationCasejudgementMadrasHighCourtVijayabaskar
Advertisement
Next Article