Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்.!

07:10 AM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ். வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிவ் பானர்ஜி, ஓய்வு பெற்றதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

நாட்டில் பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தற்போது ஒரே ஒரு நீதிபதி மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பதால், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதனை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைப்பதாக கொலிஜியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.

இந்நிலையில், நீதிபதி எஸ். வைத்தியநாதனை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக குறைந்து காலியிடங்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

கடந்த 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி வைத்தியநாதன், 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
High courtHigh Court Of MegalayaJustice VaidyanathanMegalayaPresident of India
Advertisement
Next Article