Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை!!

10:00 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

Advertisement

நீதிபதி வைத்தியநாதன் கோவையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கடந்த 1986 ல், வழக்கறிஞராக பதிவு செய்து, உயர் நீதிமன்றத்தில் 'பிராக்டிஸ்' செய்தார். 2013 அக்டோபரில் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்; 2015ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பணியாற்றினார்.

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி நேற்று (நவ.01) ஒய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு வைத்திய நாதனை கொலீஜீயம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு இன்று அனுப்பியுள்ளார்.

Tags :
Chief JusticeCollegiumDY ChandrachudjusticeMadras High CourtMeghalaya High Courtnews7 tamilNews7 Tamil UpdatesSVaidyanathan
Advertisement
Next Article