Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்கூட்டியே விடுதலை கோரும் சிறைவாசிகள் - விரைந்து நடவடிக்கை எடுக்க சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை #HighCourt உத்தரவு

08:30 AM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத் துறை டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழகம் முழுவதும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கைதிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை வரிசைப்படி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறை கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் ஈஸ்வரனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி., வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி யசோதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு, முன்கூட்டி விடுதலை கோரும் விண்ணப்பங்களை உரிய காலக்கட்டத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்பது அதிகாரிகளின் கடமை. இதில், காலதாமதம் ஏற்பட்டால், அது சிறைவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முன்கூட்டியே விடுதலை கோரும் விண்ணப்பங்களை வரிசைப்படி எந்த பாகுபாடும் இல்லாமல் பரிசீலிக்க வேண்டும்.
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அரசு உருவாக்கி, ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் முன்கூட்டியே விடுதலை கோரி சிறைவாசிகள் அளித்தது, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வரிசைப்படி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே விடுவிக்க கோரும் விண்ணப்பத்தின் விவரங்களை பதிவேடு உருவாக்கி பராமரிக்க வேண்டும். இந்த வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக சிறைத்துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Share
Tags :
dgpMadras High Court
Advertisement
Next Article