Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்தியப்பிரதேசம் : நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.3.85 கோடி பறிமுதல்!

09:14 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு நிலக்கரி சுரங்க அதிகாரிகளிடம் இருந்து ரூ.3.85 கோடியை பறிமுதல் செய்த சிபிஐ அவர்களை கைது செய்துள்ளது. 

Advertisement

மத்தியப்பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்சிஎல்) நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை நேற்று சிபிஐ  கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.3.85 கோடி பணத்தையும் கைப்பற்றியது.

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை விஜிலென்ஸ் அதிகாரிகளின் வளாகங்கள் உட்பட 25 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின் மேலாளரும், செயலாளருமான சுபேதார் ஓஜாவின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.

இவர் பல ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சுரங்க அனுமதிக்காக பணம் வசூலித்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், சிங்ராலியில் உள்ள சங்கம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் உரிமையாளரும், இடைத்தரகருமான ரவிசங்கர் சிங்கையும் சிபிஐ கைது செய்துள்ளது. ரவிசங்கர் சிங் பல ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் என்சிஎல் அதிகாரிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்பட்டு அவர்களுக்கு லஞ்சம் பெற உதவியதாக கூறப்படுகிறது.

Tags :
CBIMadhya pradeshNorthern Coalfields LimitedRaid
Advertisement
Next Article