மத்திய பிரதேச அமைச்சர்கள் இனி வரி செலுத்த வேண்டும்! 52 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்த அமைச்சரவை!
09:07 PM Jun 25, 2024 IST
|
Web Editor
முதலமைச்சர் பரிந்துரையின்படி இதனை அனைவரும் ஏற்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது என அம்மாநில ஊரக நிர்வாகத்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
Advertisement
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், தங்களது வருவாய்க்கு இனி வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது.
Advertisement
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இன்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அம்மாநிலத்தின் முதலமைச்சர் மோகன் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,
“கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் விதிமுறையை நீக்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மாநில அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளுக்கான வரியை மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.
இனி, மத்தியப் பிரதேச அமைச்சர்கள் தங்களது ஊதியம் மற்றும் அகவிலைப்படிகளுக்கான வரியை தாங்களே செலுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Article