Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

08:13 AM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் மயூர் என்ற 6 வயது சிறுவன், ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை, குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்துள்ளான். இது தொடர்பாக அங்கு விளையாடி கொண்டிருந்த மற்ற சிறுவர்கள், மயூரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா‌ : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!

அந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், , 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். சிறுவனை மிட்கும் பணியில் இரண்டு பொக்லைன் இயந்திங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
bore wellMadhya pradeshmp
Advertisement
Next Article