Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கோயம்பேட்டில் லுலு மால் முற்றிலும் வதந்தி" - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு!

09:52 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்  88 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

 

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: புதுச்சேரி தலைமைச் செயலாளர் திடீர் இடமாற்றம்!

இதனைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது.  இந்த நிலையில்,  இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர்.
அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறைச் செயலாளர் சமயமூர்த்தி  'மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
ChennaiKilambakkam Bus TerminuskoyambeduKoyambedu Bus StandLuLu MallTN Govt
Advertisement
Next Article