Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் - சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!

11:02 AM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். 

Advertisement

ஜெர்மனியில் உள்ள,  லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள்,  ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.

லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, ஜெர்மனி பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபார்ட் செல்லும் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது.  இதனால் சென்னையில் இருந்து அமெரிக்கா,  கனடா,  ஜெர்மனி செல்லும்  பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்க் ஃபார்ட் நகருக்கு,  லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்,  தினமும் இயக்கப்படுகிறது.  நள்ளிரவு 12.10 மணிக்கு, சென்னை வரும் இந்த விமானம் மீண்டும்,  அதிகாலை 1.50 மணிக்கு பிராங்பார்ட் புறப்படும்.  சென்னையில் இருந்து அமெரிக்கா,  கனடா, ஜெர்மனி செல்லும் பயணிகள் இந்த விமானத்தை பயன்படுத்துவதால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணங்கள் மேற்கொள்வர்.

Tags :
GermanyLufthansapassengerspilotstrike
Advertisement
Next Article