குஜராத்தை வீழ்த்தியது லக்னோ - 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது வெற்றியை பதிவு செய்தது.
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. மும்பை இந்தியன்ஸ்க்கும், டெல்லி கேபிடல்ஸுக்கும் இடையிலான முதல் போட்டியில், 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணை, இன்னிங்க்ஸை தொடங்கியது. டி காக் 6 ரன்களும், படிக்கல் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 33 ரன்களும், ஸ்டாய்னிஸ் 58 ரன்களும் குவித்தனர். இறுதியாக நிகோலஸ் பூரன் 32 ரன்களுடனும், க்ருணால் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது லக்னோ அணி. குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.