Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய லக்னோ அணி - ஸ்டொய்னிஸ் அதிரடி!

06:34 AM Apr 24, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபாரமாக பேட் செய்து தனது அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

Advertisement

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 39 ஆவது போட்டியில் நேற்று (ஏப். 23) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரன்களுக்கு திணறிய சென்னை அணி நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 5 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. லக்னோ அணியில் மேட் ஹென்றி மோஸ்கான் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் டிகாக்கை வெளியேற்றினார் தீபக் சாஹர். 5-வது ஓவரில் கே.எல்.ராகுலை வீழ்த்தினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

அதன் பின்னர் ஸ்டாய்னிஸ் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 55 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் உடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் தீபக் ஹூடாவுடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டாய்னிஸ். 56 பந்துகளில் அவர் சதம் கண்டார். அவரது அபார இன்னிங்ஸின் பலனாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாய்னிஸ் 124 ரன்கள் மற்றும் ஹூடா 17 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

Tags :
Cricketcsk vs lsgIPLLSG vs CSKMSDNews7TamilNews7TamilSportsnews7TamilUpdates
Advertisement
Next Article