பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ - 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் லீக் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் ஃபாப் டு ப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின.
இதையும் படியுங்கள் : “இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டமாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார்.