Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#LSGvsKKR : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 98 ரன்களில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

06:50 AM May 06, 2024 IST | Web Editor
Advertisement

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நேற்றைய ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது.

இதையும் படியுங்கள் : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றம் சுனில் நரைன் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 39 ரன்களில் 81 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 26 பந்துகளில் 32 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 5வது வீரராக களமிறங்கினார். 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ரமன்தீப் சிங் மற்றும் வெங்கடேச ஐயர் களத்தில் இருந்தனர்.

ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 236 ரன்களை இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

அதன்படி, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். அர்ஷின் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் கேப்டன் கே.எல்.ராகுல் உடன் இணைந்து விளையாடினார். கே.எல்.ராகுல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹூடா 5 ரன்களில் வெளியேறினார். 36 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Tags :
#SportsCricketIPLIPL 2024kkrKKRvsLSGLSGLSGvsKKR
Advertisement
Next Article