LSG vs RR : 7விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
17ஆவது ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி வீரர்கள் பேட்டிங்கில் களமிறங்கினர்.
இந்த நிலையில் 2வது போட்டியில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயிண்டன் டி காக் மற்றும் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கே.எல்.ராகுலுடன் கைகோர்த்த அதிரடி ஆட்டக்காரரும் கடந்த முறை சிஎஸ்கே தோல்வியைத் தழுவ காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் தீபக் ஹூடாவுடன் கை கோர்த்து நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கை உயர்த்தினர். 20ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5விக்கெட் இழப்பிற்கு 197ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 48பந்துகளில் 76ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 107ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யெஸஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் தலா 24 மற்றும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ரியாங் பராங்க் கைகோர்க்க பராங்க் 14ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.