Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு | மகளிர் தினத்தை முன்னிட்டு என பிரதமர் மோடி அறிவிப்பு!

11:55 AM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு பரிசாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 

Advertisement

இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, “இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.  இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும்.

சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு,  ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம்.  பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும்,  அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இதுவரை ரூ.918-க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818-க்கு விற்கப்படும்.

 

மக்களவை மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன் இலவச வாக்குறுதிகள் குவிந்துள்ளன.  எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து மோடி  அறிவித்துள்ளார்.  இலவச ரேஷன் தொடர்பான பெரிய அறிவிப்பும் விரைவில் மத்திய அரசால் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

பெட்ரோல்,  டீசல் விலை குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.  கர்நாடக தேர்தலுக்கு முன்பு பெட்ரோல்,  டீசல் விலை தலா 5 ரூபாய் குறைக்கப்பட்டது. தேர்தல் ஆண்டில் மத்திய அரசின் அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு தன் விருப்பப்படி விலையை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.  தேர்தலை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ., தேர்தலுக்கு முன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது ஏன் என்ற விவாதமும் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது.

Tags :
gasinternational womens day'lpglpg cylinderNarendra modipricewomens day
Advertisement
Next Article