Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைவு!

12:31 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.

Advertisement

சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும்,  நீர் பற்றாக்குறை,  கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும்.  அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்வது வழக்கம்.

அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் காய்கறி விலையானது குறைந்துள்ளது.  அதன்படி, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 65க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,  குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொத்தவரங்காய் 1 கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
ChennaikoyambeduVegetableVegetable Price
Advertisement
Next Article