கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஒடிசாவில் மிகக் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இதன் காரணமாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே சிலிகா ஏரி என்ற பகுதியில் இன்று காலை கரையைக் கடந்த நிலையில், இன்று மிக கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, ஒடிசாவில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம், சித்திரகொண்டா பகுதிகளில் பலத்த மழை பெய்திருபப்தாகவும், இங்கு 220 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும், கோர்குண்டாவில் 217 மி.மீ. மழை பதிவாகியருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, இந்த தாழ்வுப்பகுதியானது புரியிலிருந்து தெற்கு - தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.