Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?

10:59 AM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. இந்நிலையில், 22  காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 20) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,680-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.6,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,875க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.75 காசுகள் குறைந்து ரூ.96.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது.

Tags :
ChennaiGold rateJewelssilver
Advertisement
Next Article