”காதல்... சடுகுடு..குடு.." - AR Rahman -ன் சூப்பர் ஹிட் பாடலை ரீமேக் செய்யும் ’மெட்ராஸ்காரன்’ படக்குழு!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு எனும் பாடலை ரீமேக் செய்துள்ளார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இப்பாடல் டிச.7ம் தேதி வெளியாக உள்ளது.
மலையாள சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர்தான் ஷானே நிகாம். துல்கர் சல்மானின் டிராவல் திரைப்படமான நீலாகாசம் பச்சக்கடல் சுவர்ணபூமி திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்கினார். கிஸ்மத் படத்தில் இவரது துள்ளலான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்ட நிலையில் படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் என்ற வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே திருமண வைபில் மிக ஜாலியான பாடலாக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. காதல் சடுகுடு என ஆரம்பமாகும் இப்பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு எனும் பாடலை ரீமேக் செய்து வெளியிட இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.