திம்பம் மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி: போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் தமிழ்நாடு கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி
வளைவுகளை கொண்டது. தமிழ்நாடு கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதையாக உள்ளது. தினந்தோறும் இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.
இதையும் படியுங்கள் : தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் பண்ணாரியில் இருந்து திம்பம் நோக்கி
சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை 14 வது கொண்டை ஊசி குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் சாலையின் இரு புறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டனர்.
திம்பம் நோக்கி சென்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரிகளை அனுமதிக்கக்கூடாது என வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.