Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதைபொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!

04:09 PM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையின் போது, குடோனில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.

போதைப் பொருள் கடத்தலுக்கு இவர் மூளையாக செயல்பட்டதும்,  இவருக்கு துணையாக இவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து திமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

இதனையடுத்து அவரும்,  அவரது சகோதரர்களும் தலைமறைவாகினர்.  தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இந்த நிலையில் ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.  அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
Central Narcotics Control Unit officialsCrimeDrug traffickingDrugCaseJaffer Sadiqlookout notice
Advertisement
Next Article