Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுதா கொங்கரா இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்?

09:37 PM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள புறநானூறு திரைப்படத்தில் இயக்குநர் லோகஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கூலி படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தை எடுக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.  முதன்முதலில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் லோகி. அதன்பின்னர் அண்மையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இனிமேல் என்கிற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள புறநானூறு திரைப்படத்தில் லோகி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  சூர்யாவை வைத்து இத்திரைப்படத்தை இயக்க திட்டமிருந்திருக்கிறார் சுதா கொங்கரா.  சில காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Lokesh Kanagarajmovie updatePurananoorusudha kongara
Advertisement
Next Article