Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கே.ஜி.எஃப்-இல் தொடங்கிய “மார்கழியில் மக்களிசை 2023” நிகழ்ச்சி!

05:21 PM Dec 24, 2023 IST | Web Editor
Advertisement

மார்கழியில் மக்களிசை 2023 நிகழ்ச்சியை கே.ஜி.எஃப் பகுதியில் தொடங்கிய இயக்குநர் பா. ரஞ்சித், சென்னையில் இந்த நிகழ்ச்சியை மூன்று நாள்கள் நடத்த உள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். 2024-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். அதேபோல் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். 

அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மக்களிசை என்ற பெயரில் பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து வைத்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதையடுத்து 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். அதன்படி கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதியான நேற்று தொடங்கியுள்ளார்.

பல்வேறு பாரம்பரிய கலைஞர்கள் பங்கேற்கே பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்தகட்டமாக ஓசூரில் இன்று நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 28 முதல் 30 வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

முன்னதாக, கே.ஜி.எஃப் பகுதியில் வைத்து நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், "கே.ஜி.எஃப் மக்கள் அன்பு வியக்க வைக்ககிறது. கலை மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளது. அம்பேத்கர் வழியில் நாம் அனைவரும் புரட்சியாக அணி திரள வேண்டும்" என்றார். 

 

பா. ரஞ்சித் தற்போது இயக்கி வரும் தங்கலான் பிரீயட் ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகி வருகிறது. படத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், வேட்டை முத்துகுமார் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கே.ஜி.எஃப் பகுதியில் வசித்து வந்த பழங்குடியினர் பிரட்டீஷாரை எதிர்த்தன் பின்னணியில் படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
kgfMargazhi MakkalIsaiNeelam ProductionsNews7Tamilnews7TamilUpdatesPa. Ranjith
Advertisement
Next Article