Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!

10:27 AM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,  மதிமுக,  இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.

குறிப்பாக,  தமிழ்நாட்டில் தூத்துக்குடி,  தென்காசி,  தென் சென்னை,  கரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

தூத்துக்குடியில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  குறிப்பாக தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்தார்.  இதையடுத்து,  தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்கள் : 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிமணி 5,31,829 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றார்.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  தென்காசி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

Tags :
#INDIAAllianceDMKElectionsResultsElectionsResults2024Jyoti ManiKanimozhiLoksabhaElecetionLokSabhaElections2024Rani SreekumarResultsWithNews7TamilsudhaTamilachi ThangapandianTamilNadu
Advertisement
Next Article