Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்!

08:20 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மக்களவையின் 543 தொகுதிகளில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தயார்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரம் அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். 

நாதக சார்பில் தமிழ்நாட்டில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:

  1.  திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்
  2.  வடசென்னை - மருத்துவர் அமுதினி
  3.  தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி
  4.  மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன்
  5.  திருப்பெரும்புதூர் - மருத்துவர் வெ.ரவிச்சந்திரன்
  6.  காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார்
  7.  அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்
  8.  வேலூர் - தி.மகேஷ் ஆனந்த்
  9.  தருமபுரி - மருத்துவர் கா.அபிநயா
  10.  திருவண்ணாமலை - மருத்துவர் ரா.ரமேஷ்பாபு
  11.  ஆரணி - மருத்துவர் கு.பாக்கியலட்சுமி
  12.  விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்
  13.  கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ.ஜெகதீசன்
  14.  சேலம் - மருத்துவர் க.மனோஜ்குமார்
  15.  நாமக்கல் - பொறியாளர் க.கனிமொழி
  16.  ஈரோடு - மருத்துவர் மு.கார்மேகன்
  17.  திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி
  18.  நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார்
  19.  கோயம்புத்தூர் - ம.கலாமணி ஜெகநாதன்
  20.  பொள்ளாச்சி - மருத்துவர் நா.சுரேஷ் குமார்
  21.  திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன்
  22.  கரூர் - மருத்துவர் ரெ.கருப்பையா
  23.  திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்
  24.  பெரம்பலூர் - இரா.தேன்மொழி
  25.  கடலூர் - வே.மணிவாசகன்
  26.  சிதம்பரம் - ரா.ஜான்சிராணி
  27.  மயிலாடுதுறை - பி.காளியம்மாள்
  28.  நாகப்பட்டினம் - மு.கார்த்திகா
  29.  தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்
  30.  சிவகங்கை - வி.எழிலரசி
  31.  மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி
  32.  தேனி - மருத்துவர் மதன் ஜெயபால்
  33.  விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக்
  34.  ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால்
  35.  தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன்
  36.  தென்காசி - சி.ச.இசை மதிவாணன்
  37.  திருநெல்வேலி - பா.சத்யா
  38.  கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்
  39.  கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்
  40.  புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா

நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகத்தைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சின்னங்களில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
நாதகElection2024Elections With News7TamilElections2024Loksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesNTKParliament Election 2024Seeman
Advertisement
Next Article