Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு!

07:47 PM Apr 19, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி வரை 63.20% வாக்கு பதிவாகி இருந்தன.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணியளவில் வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. எனவே வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டு இன்னும் நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், மொத்தமாக (7:00 மணி நிலவரப்படி) தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

தொகுதி                           சதவீதம்

தர்மபுரி                            - 75.44 %
கள்ளக்குறிச்சி              -75.44%
நாமக்கல்                         -74.29%
ஆரணி                              -73.77%
கரூர்                                   -74.05%
பெரம்பலூர்                    -74.46%
சேலம்                                -73.55%
விழுப்புரம்                       -73.49%
விருதுநகர்                       -72.29%
ஈரோடு                              -71.42%
சிதம்பரம்                         -74.87%
திண்டுக்கல்                    -71.37%
அரக்கோணம்                -73.92%
கிருஷ்ணகிரி                 -72.96%
திருவண்ணாமலை    -73.35%
நாகப்பட்டினம்             -72.21%
பொள்ளாச்சி                 -72.22%
வேலூர்                             -73.04%
தேனி                                 – 71.74%
திருப்பூர்                           -72.02%
தஞ்சாவூர்                        -69.82%
மயிலாடுதுறை             -71.45%
கடலூர்                              -72.40%
கன்னியாகுமரி            -70.15%
சிவகங்கை                     -71.05%
தென்காசி                       -71.06%
நீலகிரி                              -71.01%
திருவள்ளூர்                     -71.87%
திருச்சிராப்பள்ளி        –71.20%
ராமநாதபுரம்                  -71.05%
கோயம்புத்தூர்              -71.17%
காஞ்சிபுரம்                      -72.99%
தூத்துக்குடி                      -70.93%
திருநெல்வேலி               –70.46%
ஸ்ரீபெரும்புதூர்               -69.79%
மதுரை                               -68.96%
சென்னை வடக்கு         -69.29%
சென்னை தெற்கு          -67.82%
சென்னை சென்ட்ரல்   -67.35%

மொத்தம்            –                72.09%

Tags :
2024 ElectionsChennaiCMO TAMIL NADUDMKElection commissionElection2024Elections With News 7 TamilIndiaLok Sabha Elections 2024MK StalinNEWS 7 TAMILNews 7 Tamil UpdatesParliament Election 2024tamil naduvoting day
Advertisement
Next Article