கோட்டை யாருக்கு? இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குபதிவு இன்று முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 7-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (57 தொகுதிகள்) நடைபெறு வருகிறது. தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் நேரத்தில், யார் அடுத்த பிரதமர் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், மாலை 6 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
இதையும் படியுங்கள் : “ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வாக்குப்பதிவுக்கு பின் வாக்களர்களிடம் நடத்தப்படும் மாதிரி கணக்கெடுப்பு மற்றும் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல் 'Exit Polls' ஆகும். அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனக் கூறப்படுகிறது. இந்த கருத்துக் கணிப்பு 100 சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு தேர்தல் முடிவை ஒத்து இருக்கும்.
'Exit Polls' தேர்தல் முடிவுகள் என்பது ஒரு கணிப்பு மட்டுமே. இவை துல்லியமாக இருக்குமா இல்லையா என்பதை முடிவுகளுக்கு முன் தெளிவுபடுத்த முடியாது. பல முறை இந்த கணிப்புகள் துல்லியமானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன, ஆனால் சில நேரங்களில் அவை முடிவுகளுக்கு முரணாகவும் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.