Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

03:09 PM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

2ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 47.29  சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

இதையும் படியுங்கள் : விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’… மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்கள்! உ.பி.யில் நடந்தது என்ன?..

இந்நிலையில், இன்று (ஏப். 26) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பிற்பகல் 1 மணி நிலவரம் - 2ம் கட்ட வாக்குப்பதிவு

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 47.29  சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம் - 46.31%

பீகார் - 33.80%

சத்தீஸ்கர் - 53.09%

ஜம்மு & காஷ்மீர் - 42.88%

கர்நாடகா - 38.23%

கேரளா - 39.26%

மத்தியப் பிரதேசம் - 38.96%

மகாராஷ்டிரா - 31.77%

மணிப்பூர் - 54.26%

ராஜஸ்தான் - 40.39%

திரிபுரா - 54.47%

உத்தரப் பிரதேசம் - 35.73%

மேற்கு வங்கம் - 47.29%

பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி, அதிகபட்சமாக திரிபுரா - 68.92 ச சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம் - 60.32%

பீகார் - 44.24%

சத்தீஸ்கர் - 63.92%

ஜம்மு & காஷ்மீர் - 57.76%

கர்நாடகா - 50.93%

கேரளா - 51.64%

மத்தியப் பிரதேசம் - 46.50%

மகாராஷ்டிரா - 43.01%

மணிப்பூர் - 68.48%

ராஜஸ்தான் - 50.27%

திரிபுரா - 68.92%

உத்தரப் பிரதேசம் - 44.13%

மேற்கு வங்கம் - 60.60%

Tags :
Election2024Elections2024ElectionswithNews7tamilLokSabhaElections2024ParliamentElection2024
Advertisement
Next Article