Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் | 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

09:11 PM Feb 26, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலையொட்டி கேரளத்தில் போட்டியிடும் 4 தொகுதி வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், ராகுல் காந்தி இந்த முறையும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வரும் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதி செய்யும் விதமாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 4 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சிபிஐ வெளியிட்டுள்ளது.

இதில் ராகுல் காந்தி எம்.பியாக இருக்கும் வயநாடு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அதேபோல், திருவனந்தபுரம் தொகுதியில் பன்னியன் ரவீந்திரன் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags :
cpiElections2024
Advertisement
Next Article