Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் - தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

07:27 PM Apr 16, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

நாடாளுன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வார்கள். இதனையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி இடையேயான சிறப்பு ரயில் (06001), ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 04.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

கோயம்புத்தூர் சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06003) சென்னையிலிருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

Tags :
Election2024Parlimentary ElectionSouthern Railwaysspecial trains
Advertisement
Next Article