மக்களவைத் தேர்தல் 2024: ராஞ்சியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மக்களவைத் தொகுதியில் மகளிர் ஹாக்கியை மையப்படுத்தி அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.
6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 25) நடைபெற்றது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இவர்கள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஹாக்கி வீராங்கனைகள். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் அன்மோல் அங்கூர் கூறியதாவது, "வாக்காளர்கள் உற்சாகமாக வாக்கு செலுத்தவே ஹாக்கியை மையப்படுத்திய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஹாக்கி விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்தார்.