Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024 - நாதக கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்!

02:14 PM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.  இந்த நிலையில்  கூட்டணி, தொகுதி பங்கீட்டை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நிறைவு செய்துள்ளன.

தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது. நாம் தமிழர் கட்சி யார் கூட்டணியிலும் இல்லாமல் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அண்மையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். 

திருவள்ளூர் தொகுதியில் ஜெகதீஷ் சந்தர், வடசென்னை தொகுதியில் அமுதினி, தென் சென்னை தொகுதியில் தமிழ்ச்செல்வி, மத்திய சென்னை தொகுதியில் கார்த்திகேயன்,  திருப்பெரும்புதூர் தொகுதியில் ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் சந்தோஷ்குமார், அரக்கோணம் தொகுதியில் அப்சியா நஸ்ரின், வேலூர் தொகுதியில் மகேஷ் ஆனந்த், தருமபுரியில் அபிநயா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் ரா.ரமேஷ்பாபு, ஆரணியில் பாக்கியலட்சுமி, விழுப்புரத்தில் களஞ்சியம், கள்ளக்குறிச்சியில் ஜெகதீசன், சேலத்தில் மனோஜ்குமார், நாமக்கல் தொகுதியில் கனிமொழி, ஈரோட்டில் கார்மேகன், திருப்பூரில் சீதாலட்சுமி, நீலகிரி(தனி) தொகுதியில் ஜெயகுமார், கிருஷ்ணகிரியில் வித்யா வீரப்பன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நாதக கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன் முழு விவரங்களை காணலாம்.

நாகப்பட்டினம் தொகுதியில் கார்த்திகா வேட்புமனு தாக்கல்

நாகப்பட்டினம் தொகுதி நாதக வேட்பாளர் கார்த்திகா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விருதுநகர் தொகுதியில் கௌசிக் வேட்புமனு தாக்கல்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கௌசிக் வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் மேனகா வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா வேட்புமனு தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறையில் காளியம்மாள் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடலூரில் மணிவாசகன் வேட்புமனு தாக்கல்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் ரவிச்சந்திரன் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருச்சியில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேட்புமனு தாக்கல்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அரக்கோணத்தில் அப்சியா நஸ்ரின் வேட்புமனு தாக்கல்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்சியா நஸ்ரின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவையில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரியில் வித்யா வீரப்பன் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வித்யா வீரப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வடசென்னையில் அமுதினி வேட்புமனு தாக்கல்

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதினி வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாமக்கல்லில் கனிமொழி வேட்புமனு தாக்கல்

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கரூரில் கருப்பையா வேட்புமனு தாக்கல்

கரூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags :
Election2024loksabha election 2024Naam Tamizhar KatchiNTKSeeman
Advertisement
Next Article