Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வேட்புமனு தாக்கல் செய்த பின் கனிமொழி பேட்டி!

12:39 PM Mar 26, 2024 IST | Jeni
Advertisement

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

இதனிடையே மார்ச் 20-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், ரவிக்குமார், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அதேபோல் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், பாஜக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : சமூக ஊடகங்களில் 14 வயதுக்குட்பட்டோர் கணக்கு வைத்திருக்க தடை – மசோதாவுக்கு ஃபுளோரிடா ஆளுநர் ஒப்புதல்!

இந்நிலையில்,  தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி,  மாவட்ட தேர்தல் அதிகாரியும்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அப்போது, அமைச்சர்கள் கீதா ஜீவன்,  அனிதா ராதாகிருஷ்ணன்,  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் கனிமொழி,  தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறினார்.

 

Tags :
DMKElection2024Elections2024ElectionswithNews7tamilKanimozhiKanimozhiKarunanidhiThoothukudi
Advertisement
Next Article