Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவைத் தேர்தல் 2024 : கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல்?

04:20 PM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபெற்று வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிலையில்,  முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த,  102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்நிலையில்,  இன்று (ஏப். 26)  13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தெலங்கானாவில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  இந்நிலையில்,  20 ஆண்டுகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி நிறுவனர் கேசிஆரின் குடும்பத்தினர் போட்டியிடாத முதல் மக்களவை தேர்தல் இதுவென தெரிவிக்கப்படுகிறது.  தெலங்கானா ராஷ்ட்டிய சமிதி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  2004 ஆம் ஆண்டு முதல் அனைத்து மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் கேசிஆர் குடும்பத்தினர் போட்டியிட்டு வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : “சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் கண்டனம்!

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய கேசிஆர்,  கரீம்நகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சரானார். தெலங்கானா மாநில பிரிவினை பிரச்னையின் போது காங்கிரஸுடனான மோதலால் 2006 மற்றும் 2008 இடைத்தேர்தல்களில் அதே தொகுதியில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2009-ல் மகபூப்நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  அந்த சமயம் தனி தெலங்கானா மாநில இலக்கை அவர் பெற்றிருந்த நேரம்.  கேசிஆர் மகன் கே.டி.ராமராவ் 2009 தேர்தலில் சிர்சிலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  2014-ல் கேசிஆர் மேடக் எம்பி தொகுதி மற்றும் காஜ்வெல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.  இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார்.  தெலங்கானா சட்ட மன்றத்தில் டிஆர்எஸ் பெரும்பான்மை பெறவே மேடக் மக்களவை உறுப்பினர் பதவி விலகி புதிய மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அதே தேர்தலில் கேசிஆரின் மகள் கவிதா நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அவரது மகன் ராமா ராவ் மற்றும் மருமகன் ஹரீஷ் ராவ் முறையே சிர்சிலா மற்றும் சித்திபேட் தொகுதிகளில் வெற்றி பெற்று கேபினட் அமைச்சர்களாகினர்.  2018-ல் கவிதா பாஜக தரம்புரி அரவிந்திடம் தோல்வியைத் தழுவினார்.  பின்னர் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசிய அரசியலை முன்னெடுக்க 2022-ல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி என்கிற பெயரை பாரதிய ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்தார்.

10 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி,  இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது.  சட்டமன்ற தேர்தலில் கேசிஆர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 1985 முதல் போட்டியிட்டுவரும் கேசிஆர் சந்தித்த முதல் தோல்வி இது.

இந்த மக்களவை தேர்தலில் நிசாமாபாத்தில் கவிதாவை போட்டியிட திட்டமிட்டதாகவும் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அவர் கைதாகியதால் தற்போது அவரை களமிறக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேடக் அல்லது மலக்ஜ்கிரி தொகுதிகளில் கேசிஆர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் மாநில அரசியலில் கவனம் செலுத்தும் முடிவில் கேசிஆர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Election2024Elections 2024Elections With News 7 TamilKCR FamilyLok Sabha ElectionLok Sabha Elections 2024
Advertisement
Next Article