Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 | இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

05:04 AM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

Advertisement

நாடுமுழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது வெளியாகி உள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால் தேர்தல் பிரச்சார வேலைகளில் தற்போதே தீவிரம் கட்டி வருகிறது தேசிய, மாநில கட்சிகள். அந்த வகையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திருச்சி மற்றும் பெரம்பலூரில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் முதலமைச்சர், 23-ம் தேதி தஞ்சை மற்றும் நாகையில் பரப்புரை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், 16ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 17ம் தேதி தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்கிறார். அன்றுடன் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

Tags :
Election2024MK Stalintamil nadu
Advertisement
Next Article