Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 : நெல்லையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

08:18 AM Mar 25, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

Advertisement

நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது வெளியாகி உள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த ஏராளமான பக்தர்கள்!

இதையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சார வேலைகளில்  தேசிய, மாநில கட்சிகள் தீவரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக, திருச்சி மற்றும் பெரம்பலூரில் மார்ச் 22 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர், 23 ஆம் தேதி தஞ்சை மற்றும் நாகையில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார்.  இதனால், இன்று (மார்ச் - 25) காலை 6 மணி முதல் நாளை ( மார்ச் - 26 )  காலை 6 மணி வரை நெல்லை மாநகர் பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க விட நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் மூர்த்தி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், ஏப்ரல் 16 ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும்,  ஏப்ரல் 17 ஆம் தேதி தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்கிறார். அன்றுடன் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

Tags :
campaigningCHIEF MINISTERCMOTamilNaduElection2024Elections2024LokSabhaElection2024MKStalinNellai
Advertisement
Next Article