Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 | உறுதியாகுமா பாமக- அதிமுக கூட்டணி? | இன்று வெளியாகும் தகவல்!

06:54 AM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக பாமக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள தமாக, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம் டி.டி.வி.தினகரனின் அமமுக, மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக  நேற்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாமக கூட்டணி குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாக்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இதனிடையே நேற்று பாமக எம்எல்ஏ அருள் இபிஎஸ்ஐ சந்தித்து பேசினார். அப்போது பாமகவுக்கு ஏழு தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர அதிமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு தற்போது பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பாமகவின் அன்புமணியிடம் சந்திப்பு மேற்கொண்ட நிகழ்வு நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
அதிமுகபாமகADMKedappadi palaniswamiElection2024PMKRamadhas
Advertisement
Next Article