Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல் 2024 | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு!

09:21 AM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் இணைந்துள்ளது.

திமுக உடன் கொள்கை அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அக்கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை திமுக ஒதுக்கிய நிலையில், அதில் நவாஸ்கனி போட்டியிடுகிறார்.

இதையடுத்து, நவாஸ் கனிக்கு ஏணி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட நிலையில், அக்கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Tags :
லோக் சபா தேர்தல் 2024Election2024Indian Union Muslim LeagueLok sabha Election 2024
Advertisement
Next Article