Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை... மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
06:31 PM Feb 20, 2025 IST | Web Editor
Advertisement

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ayya Vaikundarholidaylocal holidayNellaiTirunelveli
Advertisement
Next Article