தவெக 5-ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 5ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.
06:24 PM Feb 02, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது. ஆனால் கட்சிக்கு மாவட்ட வாரியாக பல நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது.
Advertisement
இதனையடுத்து சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 76 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 5ஆம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது.
Next Article