Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#legendsaravananpressmeet “இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார்” -லெஜன்ட் சரவணன்!

02:09 PM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

இனி ரசிகர்களை தேடி நடிகர் விஜய் வருவார் என லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்ன்ர் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்முலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சென்னையில் நடந்த ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விரைவில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் லெஜெண்ட் சரவணன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடி துறைமுகத்தில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது தொடர்ந்து வட மாநிலங்கள் வயநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளது அதற்காக படக்குழு முழுமையாக ஈடுபாடுடன் பணியாற்றி இருக்கிறார்கள்.

திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டில், குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிச்சயம் வழங்கப்பட வேண்டும் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தக்க தீர்ப்பு வழங்கும்.

ஒரு எதார்த்தமான நகைச்சுவையுடன் தான் ஹோட்டல் உரிமையாளர் பேசினார். அதில் சில கருத்துக்கள் மத்திய அமைச்சருக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவர்கள் தெரியப்படுத்தும் பொழுது தொழிலதிபர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதில் பெரிது படுத்துவதற்கு எதுவும் இல்லை.

தொழில்துறை மற்றும் சினிமா அரசியல் மூன்றும் மிக பிடித்தமானது மூன்றிலும் இணைந்து பயணிப்போம். மகாராஜா, டிமான்டி காலனி, கழுகு போன்ற படங்கள் கதையால் மக்களிடம் வரவேற்கப்படுகிறது. என்னுடைய படம் ஆக்சன் திரில்லர் திரைப்படம்.

விஜய் அரசியல் வந்தது குறித்து கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவும் நிலையில் சரியான கூட்டணி அமைப்பவர்களே வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது. காலம் இருக்கிறது அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்னுடைய கொள்கைக்கு ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.

யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்னை பொறுத்தவரை முதல் படம் வெற்றி படம் இரண்டாவது படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் முடித்து வந்திருக்கிறார் மிகப்பெரிய வெற்றி பயணமாக முடிந்திருக்கிறது அதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள் விஜய் தேடி சென்று கொண்டிருந்தார்கள் இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு மிகப்பெரிய இழப்பு என்றாலும் அவருடைய முயற்சியும் உழைப்பும் அனைவரும் நினைவு கோர வேண்டும். ஜிஎஸ்டி மூலம் சீரான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் அதன் குறைகள் மற்றும் நிறைகளை மத்திய அரசு குழு அமைத்து அதை மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது தான்.

ஆன்லைன் விற்பனை தவிர்க்க முடியாது. தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை பொறுத்தவரையில் மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் அருகில் சென்று விற்பனைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. மதுவிலக்கு முழுமையா அமல் படுத்த முடியாது. அதை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு லெஜன்ட் சரவணன் தெரிவித்தார்.

Tags :
Legend Saravananlegend saravanan latest speechlegend saravanan press meetlegend saravanan speech
Advertisement
Next Article