Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!

09:29 PM Feb 29, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் அதன் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் பல்வேறு சலுகைகளை வழங்கி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.  இந்த நிலையில், சிகரெட் பாக்கெட், மது பாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவை ஸ்வீட் பாக்ஸில் வைத்து வழங்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சி சின்னம் மற்றும் தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் ஒரு குவாட்டர் பாட்டில், சிகரெட்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள் குளிர்பானம் மற்றும் பணம் ஆகியவை அடங்கிய மதுபான பெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் வீடு வீடாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னத்துடன் சுவீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.  இந்த சுவீட் பாக்சில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோன் ரெட்டி மற்றும் வேட்பாளர்கள் படங்கள் உள்ளன.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Andraandra pradeshElectionIndiaTelugu Desam PartyYSR Congrss
Advertisement
Next Article