Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யானையைத் தொடர்ந்து சிங்கம்... பிரபு சாலமனின் புதிய படம் அறிவிப்பு!

04:22 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமானக் கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதில் காதலைப் பேசுவார். மைனா மற்றும் கும்கி ஆகிய படங்கள் பெரிய வசூல் வெற்றியையும் பெற்றன. ஆனால் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கத்திற்கும், சிறுவனுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இந்தப் படத்திற்கு மம்போ எனப் பெயரிடப்பட்டுள்ளது. உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசிய திரைப்படம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கும்கி படத்தில் யானையை வைத்து படத்தை உருவாக்கியவர் இம்முறை சிங்கத்தை கையாளப்போவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்போ படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

Tags :
D. ImmanlionMamboPrabhu solomon
Advertisement
Next Article