Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.5000 வரை பரிசுகளை பெறலாம் என #PinarayiVijayan படத்தோடு பரவும் லிங்க் - உண்மை என்ன?

10:10 AM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by  ‘Newsmeter’

Advertisement

தீபாவளியையொட்டி, ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசு பெறலாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் படத்தோடு சமூக வலைதளங்களில் ஒரு யு.ஆர்.எல் லிங்க் பரவி வருகிறது இது குறித்த உண்மைத் தன்மையைப் பற்றி விரிவாக காணலாம்

தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை ஒட்டி சமூக வலைதளங்களில் ஒரு லிங்க் வேகமாக பரவி அனைவராலும் பரவலாக பகிரப்பட்டது. அந்த லிங்கை க்ளிக் செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசு பெறலாம் எனவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன் படத்துடன் அந்தப்படம் வந்ததால் பலர் குழப்பத்தில் பகிரத் தொடங்கியுள்ளனர். அதேபோல பணப்பரிமாற்ற செயலியான போன்பேயின் லோகோவும் அதில் இடம்பெற்றிருந்தது. அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மைச் சரிபார்ப்பு:

தீபாவளி பரிசு என பகிரப்பட்ட லிங்க் குறித்த உண்மைத் தன்மையை ஆராய நியூஸ் மீட்டர் உண்மைச் சரிபார்ப்பு தளம் முடிவு செய்தது.அதன்படி பகிரப்படும் லிங்கின் ஃபேஸ்புக் பக்கத்தின் பெயர் மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்ட கூறுகள், மற்றும் லிங்க் போன்றவை இதேபோல கடந்த காலங்களிலும் பரவியிருப்பதால் இது போலியானதாக இருக்கலாம் என்பதை யூகித்தது. மேலும் இது குறித்த ஆய்வு செய்தபோது இந்த லிங்க் மோசடியை இலக்காகக் கொண்ட போலி இணைப்பு என்பதும் தெரியவந்தது.

அப்பதிவில் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்வதன் மூலம், அது இணையதளத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் மற்றும் UPI உள்ளிட்ட சில லோகோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்க் https://cashzoneofferzz.dev/PAYM/index.html 6 என்பது ஒரு போலியான URL என்பதை உறுதிப்படுத்தியது. இது ஒரு நிதிமோசடி செய்யும் லிங்க் என்பதை நியூஸ் மீட்டர் உறுதி செய்தது.

சம்பந்தப்பட்ட லிங்க் இடம்பெற்றுள்ள பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்தால், அதில் இதேபோல வேறு சில சலுகைகளை கொண்ட போலி இணைப்புகளையும் காணமுடியும். இதேபோல லிங்குகளை க்ளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட தொகை ஸ்கிரீனில் காண்பித்து இந்த தொகையை உங்களது போன்பே அக்கவுண்டிற்கு மாற்ற விரும்புகிறீர்களா என உறுதிப்படுத்துவதற்கான் ஒரு பாப்அப் இணைப்பு வெளிப்படும்.

இதனைத் தொடர்ந்து அதனை க்ளிக் செய்தால் அது நேரடியாக நமது போன்பே அக்கவுண்டிற்கு சென்று UPIக்கு சென்று நமது பாஸ்வேர்டை பதிவு செய்யச் சொல்லும். நாமும் கவனக் குறைவாக பாஸ்வேர்டை செலுத்திவிட்டால் அவ்வளவுதான். நமது அக்கவுண்டில் இருந்து பாப் அப்பில் ஒளிரப்பட்ட பணத்தை எடுத்துவிடும்படி அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆக இது பணம் வழங்குவதற்கான இணைப்பு அல்ல, மாறாக பணத்தை நமது கணக்கிலிருந்து எடுப்பதற்கான லிங்க் என்பது உறுதியாகிறது.

முடிவு :

தீபாவளியையொட்டி, ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசு பெறலாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்படும் லிங்க் போலியானது என்றும் அது நமது கணக்கிலிருந்து பணத்தை திருடுவதற்கான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் உண்மைச் சரிபார்ப்பில் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckFakeFake URLPaymentlink
Advertisement
Next Article