Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மக்களவைத் தேர்தலைபோல சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக 234க்கு 234 பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" - நடிகர் விஜயகுமார் பேட்டி!

08:23 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

“நாடாளுமன்ற தேர்தலை போல சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக 234க்கு 234 இடங்கள் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில்,  அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நடிகர்கள் நாசர், சத்யராஜ், விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். இதனையடுத்து மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சத்யராஜ்..

“திமுகவின் சாதனைகள் இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம் சிறப்பான முறையில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியின் 14 வயது வாழ்க்கை வரலாறு முழுவதுமே இந்த புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அவருடைய முதல் போராட்டமான இந்தி ஒழிப்பில் இருந்து பெண்களுக்கான விடுதலைப் போராட்டம் வரை உள்ளது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி, சமூக உரிமை,பெண்களுக்கு வேலைவாய்ப்பு
குறித்த போராட்டம் முழுவதும் இதில் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படித்த பள்ளி மற்றும் அவருடைய பள்ளி பருவம் குறித்த தகவல்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்க்கும் பொழுது அவர் நேரில் இருப்பது போல்
தோன்றுகிறது. அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை எப்படி வழி நடத்துகிறார் என்பது குறித்து முக்கிய சான்றிதழ்கள் இங்கு இடம் பெற்றுள்ளது” என தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய நடிகர் விஜயகுமார்,

“கருணாநிதி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் எவ்வளவு பாடுபட்டுள்ளார்
என்பதை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது. இந்த புகைப்பட கண்காட்சியை பார்த்தால் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு முழுவதுமே தெரிய வரும்.  என்னென்ன சாதனைகள் அவர் செய்தாரோ அதைவிட அதிகமான சாதனைகளை முதலமைச்சர்
செய்து வருகிறார். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்றது போல் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 ஜெயித்தது போல் சட்டமன்ற தேர்தலில் 234 க்கு
234 வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என தெரிவித்தார்.

நடிகர் நாசர்,

நவீன அறிவியலோடு இந்த புகைப்பட கண்காட்சி இடம் பெற்றுள்ளது. நாங்கள்
எதிர்பார்க்காத அளவிற்கு இந்த கண்காட்சி அமைந்துள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சி குழந்தைங்களுக்கு தான் மிக மிக அவசியம். இந்த தமிழகத்தை யார் விட்டுச் சென்றார்கள் என்பதை  இந்த புகைப்பட கண்காட்சி மூலம் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா, பெரியார் போன்றவர்கள் பல்வேறு சாதனைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தார்கள். அதனை கருணாநிதிக்கு நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

“கருணாநிதி விட்டு சென்ற பணிகளை தமிழக முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த புகைப்பட கண்காட்சிக்கு அனைத்து குழந்தைகளையும் வரவழைக்க வேண்டும்.
காலத்தால் அழியாத இந்த தலைவனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

Tags :
assembly electionDMKElection2024karunanithiMK StalinNassarSathyarajVijayakumar
Advertisement
Next Article