Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோபி நயினார் படப்பிடிப்பில், மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு...

04:40 PM Dec 27, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் படப்பிடிப்பின் போது, மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழந்த சம்பவம்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் அறம் திரைப்பட
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் "அகரம் காலனி" என்ற திரைப்படத்திற்கான
படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.  நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்த போது, காடா லைட்
உபகரணத்தை லைட்மேன் சண்முகம் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தள்ளிச் சென்றுள்ளனர். அப்போது காடா லைட் தடுமாறி அந்த தெருவில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் பட்டதில்,  இருவரையும்  மின்சாரம் தாக்கியுள்ளது.  இந்நிலையில், காயமடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால்,  வழியிலேயே சண்முகம் என்ற தொழிலாளி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர்,  லைட்மேன் சண்முகத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  மற்றொரு லைட்மேன் ரஞ்சித்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
News7Tamilnews7TamilUpdatesRed Hillsshooting spotTiruvallur
Advertisement
Next Article