Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடம்பூர் அருகே தடுப்புச் சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

08:54 AM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

கடம்பூர் செல்லும் வழியில் உள்ள வனச்சாலையின் தடுப்புச் சுவரில் படுத்து
கிடந்த சிறுத்தையை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி
ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
கெம்பநாயக்கன்பாளையத்தில் இருந்து கடம்பூர் வரை சத்தியமங்கலம் புலிகள்
காப்பகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனச்சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக
கடம்பூர் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வனச்சாலையில் சிறுத்தை
நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் கடம்பூர் மலைப்பகுதி செல்லும் வழியில் உள்ள வனச்சாலையில் நேற்று
இரவு மல்லியம்மன் கோயில் அருகே சிறுத்தை ஒன்று சாலையின் ஓரம் இருந்த தடுப்பு
சுவர் மீது படுத்திருந்தது. அப்போது அவ்வழியாக காரில் வந்த வாகன ஓட்டி ஒருவர்
சிறுத்தையை கண்டு அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தி தனது செல்போனில் படம் பிடித்தார்.

இதையும் படியுங்கள் : ரூ.5 கோடி பணம் கேட்டு மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் கொள்ளையர்கள் மிரட்டல்! -12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!

இதையடுத்து, சிறிது நேரத்தில் தடுப்பு சுவர் மீது நடந்து சென்ற சிறுத்தை
வனத்திற்குள் சென்றது. கடந்த சில மாதங்களாக கடம்பூர் மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Erode DistrictforestKadampurleopardmotoristssathyamangalam tiger reserve
Advertisement
Next Article