Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விடுதலைக்கான யுத்தம்" - வெளியானது தங்கலான் படத்தின் டீசர்..!

12:17 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து திரைக்கு வர உள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியானது.

Advertisement

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது  ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார்.   இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

பின்னர் விக்ரம் குணமாகிய நிலையில் படப்படிப்பு சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் தங்கலான் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட தொகையைத் தாண்டி ரூ.100 கோடிக்கும் மேல் செலவானதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 1-ம் தேதியான இன்று  வெளியாகியுள்ளது.

இந்த டீசரின் துவக்கத்தில் நடிகர் விக்ரம் பாம்பை கையில் பிடித்து அதை கையாலே துண்டு துண்டாக பிய்த்து போடும் காட்சி மற்றும் போர்க்களம், தங்கச் சுரங்கத்தில் மக்கள் பட்ட துயரம் உள்ளிட்டவை தத்ரூபமான காட்சிபடுத்தப்பட்டுள்ளன. விக்ரமின் தோற்றம், மிரட்டலான நடிப்பு மற்றும் பழைய காலகட்டம் உள்ளிட்டவை சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
#ActorVikram#gvprakashNews7Tamilnews7TamilUpdatesPaRanjiththangalanupdate
Advertisement
Next Article